குஜராத் முதல்வர் நரேந்திரமோதிக்கு, ஹவாலா குற்றவாளியுடன் தொடர்பு!

ஹவாலா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அஃப்ரோஷ் பாட்டாவுடன், குஜராத் முதல்வர் நரேந்திரமோதி

ஹவாலா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அஃப்ரோஷ் பாட்டாவுடன், குஜராத் முதல்வர் நரேந்திரமோதி

மனிதருள் புனிதர் என்றும், எதிர்காலத்தில் இவர்தான் இந்திய திருநாட்டின் பிரதமர் என்றும், பாரதிய ஜனதா கட்சினரால் பெருமையாக பேசப்பட்டு வரும் நரேந்திரமோதி, ஹவாலா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் உள்ளதாக புகைப்பட ஆதாரங்களுடன் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத் மற்றும் சூரத்தை சேர்ந்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், பிரபல ஹவாலா நபர் அஃப்ரோஷ் பாட்டா என்பவரது வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில், 700 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர் என்றும் காங்கிரஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

ரன்தீப் சுர்ஜேவாலா

ரன்தீப் சுர்ஜேவாலா

நரேந்திரமோதியுடன் அஃப்ரோஷ் பாட்டா பல இடங்களில், பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக காணப்பட்டதாகவும், நரேந்திரமோதியின் வீட்டில்கூட அஃப்ரோஷ் பாட்டாவை பார்த்துள்ளதாகவும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

தாவூத் இப்ராகிமுடன், பப்லு ஸ்ரீவஸ்தவா (பழைய படம்)

தாவூத் இப்ராகிமுடன், பப்லு ஸ்ரீவஸ்தவா (பழைய படம்)

அகமதாபாத்தில் இன்று (28.04.2014) செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், நரேந்திரமோதிக்கு நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு இருப்பதாகவும், பிரபல நிழல் உலக தாதா பப்லு ஸ்ரீவஸ்தவாவுடன் நரேந்திரமோதிக்கு என்ன தொடர்பு உள்ளது என்பதை அவர் விளக்க வேண்டும் என்றும் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

– டாக்டர்.துரைபெஞ்சமின்.