தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு: மக்கள்ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்!

Photo-0028Photo-0025Photo-0019Photo-0027Photo-0003Photo-0011Photo-0012Photo-0004Photo-0015தமிழகம் மற்றும் புதுரிச்சேரியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று (24.04.2014) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலுக்காக தமிழகத்தில் 60 ஆயிரத்து 818 வாக்குச்வாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

5 கோடியே, 50 லட்சத்து, 42 ஆயிரத்து, 876 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப் பதிவின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக ஒரு லட்சத்து 16 ஆயிரம் காவல்துறையினரும், காவல்துறை அல்லாத 27 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக 5ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மக்கள் பயம் ஏதும் இன்றி அனைத்து வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இதேபோல், புதுச்சேரியிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் 30 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக 905 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மத்திய பாதுகாப்பு படையின் 7 கம்பெனிகள் உள்பட 5,700 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

-சி.மகேந்திரன், பா.சீனிவாசன்.