மோதிக்கும், ராஜபக்சேவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை: நடிகர் கார்த்திக் காட்டம்!

actor-karthickமோதிக்கும், ராஜபக்சேவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை, என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் பேசியுள்ளார்.

கன்னியாகுமரியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கார்த்திக் பேசுகையில், இந்த தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கிறது. இதில் காங்கிரஸ்தான் தர்மம், பா.ஜ.க அதர்மம்.

நம்மைச் சுற்றியுள்ள நாடுகளால் நமக்கு ஆபத்து இருக்கும் இந்நேரத்தில் மோதியிடம் நாட்டை ஒப்படைப்பது சரியல்ல. 2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட, ‘கோத்ரா’ சம்பவத்தை யாரும் மறக்க முடியாது. அந்த கொடூர சம்பவத்துக்கு வருத்தம் கூட தெரிவிக்காதவர் மோதி.

மோதி பிரதமரானால் இந்த தேசம் என்ன ஆகும்? சிதறு தேங்காயாக சிதறிவிடும். இவ்வாறு நடிகர் கார்த்திக் பேசியுள்ளார்.