கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் 7-ம் ஆண்டு விழா: திரைப்பட நடிகர் விவேக் கலந்துக் கொண்டார்

vivek.jpg2 vivek.jpg1

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், தோளுர்பட்டி, கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் 7-ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு முதன்மை விருந்தினராக திரைப்பட நடிகர் விவேக் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

இவ்விழா கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.எஸ்.கே. பெரியசாமி; தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கல்வி நிறுவனங்களின் செயலாளர் பி.எஸ்.கே. தங்கவேலு வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும், கல்வி நிறுவனங்களின் பொருளாளர் பி.எஸ்.கே. தென்னரசு, துணைத்தலைவர் பி.எஸ்.கே. அருண்குமார், இணைச் செயலாளர் பி.எஸ்.கே. அசோக்குமார்  மற்றும் கோஸ்டல் ரெஸிடென்சி, நாமக்கல் மேனேஜிங் டைரக்டர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொங்குநாடு பொறியியல் கல்லூரி முதல்வர், முனைவர் அசோகன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அய்யாத்துரை மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வர் நாகராஜன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.

திரைப்பட நடிகர் விவேக் பேசும்போது, இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு உள்விளையாட்டரங்கம், உணவுக்கூடம் மற்றும் பசுமையான புல்வெளி ஆகியவற்றை இக்கல்வி நிர்வாகத்தினர் செய்திருப்பதை மிகவும் பாராட்டி பேசினார்.

மேலும், படிக்கின்ற ஒவ்வொரு மாணவனும் விவேகானந்தரை இதயத்தில் வைத்து நல்ல முறையில் எதிர்காலத்தில் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றுக் கூறினார்.

நம் தாய்நாட்டிற்கு இந்திய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் உலக அளவில் சிறந்த விஞ்ஞானியாக கருதப்படும் நமது அப்துல் கலாம் அரிய பொக்கிசமாக கிடைக்க வித்திட்டவர் என்று புகழாரம் சூட்டினார்.

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. இறுதியாக, பி.எஸ்.கே. தென்னரசு நன்றியுரை வழங்கினார்.

-பி.மோகன்ராஜ்