மு.க.அழகிரி – மு.க.ஸ்டாலின் மோதல் : மதுரையில் தி.மு.க. கூண்டோடு கலைப்பு!

stalin-alagiridmk news_Karunanidhi-Stalin

 ‘நான் வீரமாக இருந்த போது மு.க.அழகிரி பிறந்தான், நான் விவேகமாக இருந்த போது மு.க.ஸ்டாலின் பிறந்தான்’ என்று தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி கடந்த காலங்களில் பெருமையாக பேசி வந்தார். ஆனால், தற்போது ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ என்று சோக கீதம் பாடும் அளவிற்கு அவருக்கு பிள்ளைகளால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சனையே தீர்க்கமுடியாத இவர் நாட்டுப் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பார்? என்று தி.மு.க பிரமுகர்களே இப்போது புலம்பி வருகிறார்கள்.

இந்நிலையில் மதுரை மாநகர் மாவட்டக் கழகம், மற்றும் அந்த மாவட்டக்கழகத்திற்கு உட்பட்ட பகுதிக் கழகங்கள், வட்டக்கழகங்கள் ஆகிய அமைப்புகள் அனைத்தும் உடனடியாகத் கலைக்கப்படுவதாக தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் இன்று (04.01.2014) அறிக்கை வெளியிட்டுள்ளார்.  மதுரை மாநகர் மாவட்டக்கழகத்திற்கு முறைப்படி அமைப்புத் தேர்தல்கள் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை பின்வரும் பொறுப்புக்குழு குழு தற்காலிகமாக நியமிக்கப்படுகிறது.

பொறுப்புக்குழுத் தலைவர்– கோ.தளபதி உறுப்பினர்கள்: வி.வேலுச்சாமி, பெ. குழந்தை வேலு, எம்.ஜெயராம், பாக்யநாதன், மு.சேதுராமலிங்கம், சி. சின்னம்மாள்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.