இலங்கைக்கு போப் ஆண்டவர் செல்லக்கூடாது : கத்தோலிக்க திருச்சபைகள் வேண்டுகோள்!

fr.francice

போர்க்குற்றவாளியான ராஜபக்சவின் அழைப்பை ஏற்று போப் ஆண்டவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என கத்தோலிக்க திருச்சபைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. போப் ஆண்டவர் பிரான்சிஸ் தங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று இலங்கைக்குச் செல்வதற்குப் பரிசீலித்து வருவதாக போப் கூறியிருப்பது இலங்கை, தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனடிப்படையில் போர்க்குற்றவாளியான ராஜபக்சவின் அழைப்பை போப் ஏற்கக் கூடாது என்கிற கோரிக்கையினை தமிழக கத்தோலிக்க திருச்சபைகளும் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாளையங்​கோட்டை மகாராஜ நகர் ததாதேயு ஆலயத்தின் பங்குத் தந்தையான பாக்கியசெல்வன் தெரிவிக்கையில், இலங்கை அரசு இப்போதும் கிறிஸ்தவ தேவால​யங்களையும் சிவதலங்கள் மற்றும் இஸ்லாமிய தலங்கள் என்பவற்றை அழித்து சிங்கள மயமாக்கும் வேலைகளை செய்து வருகின்றது.

இப்போது ராஜபக்சவுக்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் உலக அரங்கில் தனது முகமூடி கிழிவதைப் பொறுக்க முடியாத ராஜபக்ச, போப் பிரான்சிஸ் தங்கள் நாட்டுக்கு வந்து சென்றால், தான் செய்த பாவங்கள் எல்லாம் மறைந்து விடும் என நினைக்கிறார். எனினும் ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்பது எங்களது திட்டவட்டமான முடிவாகும் என்றார்.

Leave a Reply