இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் முதல் மந்திரிகள் ஆலோசனை கூட்டம்.

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் முதல் மந்திரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களின் முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்மற்ற மாநிலங்களில் இருந்து மூத்த அமைச்சர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

பிரதம செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.-க்கள் கூட இருந்தனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்.எஸ்.), உள்துறை செயலாளர், இயக்குனர், புலனாய்வு பணியகம் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் ஆகியோர் மத்திய அமைச்சரவையில் இருந்து வந்தனர்.

மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இரயில்வே, சிவில் விமான போக்குவரத்து, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டின் ஒருங்கிணைப்பு, உளவுத்துறை பகிர்வு, உள்நாட்டு மாநில எல்லைகளைச் சார்ந்த நடவடிக்கைகளுக்கான கூட்டு பணிப் படைகளை அமைத்தல் தொடர்பான பிரச்சினைகள் பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com