மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பகுதி வளர்ச்சி அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
பல்வேறு கலாச்சாரத் துறைகளில் அந்தந்த துறைகளில் மேம்பட்ட பயிற்சி பெறுவதற்காக, ‘இளம் கலைஞர்களுக்கு உதவித்தொகை’ என்ற திட்டத்தை கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் மூலம் கலாச்சார அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அறிஞருக்கும் 2 வருட காலத்திற்கு நான்கு சமமான ஆறு மாத தவணைகளில் மாதம் ரூ 5000 வழங்கப்படுகிறது.
–திவாஹர்
