நாடு தழுவிய சோதனை நடவடிக்கைகளில் தங்கம், போதைப்பொருட்கள், மின்னணு சிகரெட்டுகள் பறிமுதல்!- 5 வெளிநாட்டினர் உட்பட 20 பேர் கைது.

கடத்தல் கட்டமைப்புகள், சர்வதேச கடத்தல் கும்பல்களுக்கு எதிரான தனது தொடர்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI – டிஆர்ஐ) இந்த வாரம் நாடு முழுவதும் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் விளைவாக, வெளிநாட்டுத் தங்கம், ஹெராயின், கஞ்சா, செம்மரங்கள், தடைசெய்யப்பட்ட வனவிலங்குப் பொருட்கள், மின்னணு சிகரெட்டுகள், வெளிநாட்டு கசகசா விதைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 5 வெளிநாட்டினர் உட்பட 20 பேரைக் கைது செய்யப்பட்டனர்.

தங்கம்:

29.07.26 அன்று, புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையில், துபாயிலிருந்து வந்திருந்த 2 வெளிநாட்டுப் பயணிகளை டிஆர்ஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது 4 கிலோ எடையுள்ள 40 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த இரண்டு பயணிகளும் கைது செய்யப்பட்டனர்.

வாரத்தின் தொடக்கத்தில், இந்திய-பங்களாதேஷ் எல்லையில் டிஆர்ஐ அதிகாரிகள், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கைகளில், சுமார் 3.2 கிலோ வெளிநாட்டுத் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். துங்கியில் உள்ள எல்லை வேலி அருகே ஒருவரிடமிருந்தும், ஹிலி எல்லையில் மற்றொருவரிடமிருந்தும், மூன்றாவது நபராக ஹகிம்பூர், நித்யானந்தகடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடமிருந்தும் தங்கம் மீட்கப்பட்டது. இந்தப் பறிமுதல்கள் தொடர்பாக ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுதவிர, வாரணாசி, தில்லி விமான நிலையம், தமிழ்நாடு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் டிஆர்ஐ அதிகாரிகள் சுமார் 2.2 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்து, 4 நபர்களைக் கைது செய்தனர்.

மொத்தத்தில், சுமார் ரூ.14 கோடி மதிப்புள்ள 9.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

வனவிலங்கு பொருட்கள்:

மற்றொரு நடவடிக்கையில், பாகிஸ்தானில் இருந்து 14 மெட்ரிக் டன் குக்குல் பிசினை, கடத்தி வர நடந்த முயற்சியை டிஆர்ஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ஏறத்தாழ ₹1.4 கோடி ஆகும். அந்த சரக்கு, சோமாலியாவில் இருந்து வந்த இயற்கை பிசின் என்று துபாய் வழியாக அனுப்பப்பட்டிருந்தது.

இந்தியா – பாகிஸ்தானின் வறண்ட பகுதிகளுக்கு மட்டுமே உரிய இனமான குக்குல் பிசின் சிவப்புப் பட்டியலில் ‘மிகவும் அருகிவரும் இனம்’ எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணையில், அந்த சரக்கு குக்குல் பிசின் என்றும், அது பாகிஸ்தானில் இருந்து வந்தது என்றும், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி கொண்டு வரப்பட்டிருந்தது என்றும் தெரியவந்தது. பாகிஸ்தானில் இருந்து வரும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வதைத் தடைசெய்யும் கட்டுப்பாடுகளை இந்த இறக்குமதி மீறியுள்ளது. இதில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மற்றொரு பெரிய வனப் பொருட்கள் கடத்தல் நடவடிக்கையில், சென்னையின் புறநகர்ப் பகுதியில் டிஆர்ஐ அதிகாரிகள் ஒரு லாரியை வழிமறித்து, காலி பிளாஸ்டிக் பெட்டிகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4.8 மெட்ரிக் டன் எடையுள்ள 142 செம்மரக் கட்டைகளை மீட்டனர் . இதன் மதிப்பு சுமார் ₹2.50 கோடி ஆகும். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள்:

மணிப்பூரில், மியான்மரிலிருந்து எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் குறித்த குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில், அசாம் ரைபிள்ஸ், மணிப்பூர் காவல்துறையின் உதவியுடன், டிஆர்ஐ அதிகாரிகள் சுராசந்த்பூர் அருகே ஒரு வாகனத்தை சோதனையிட்டனர். அதில் சுமார் 2.7 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.

மும்பையில் மேலும் இரண்டு நடவடிக்கைகளில், சுமார் 2 கிலோ ஆம்பெடமைன் படிகங்கள், எம்டிஎம்ஏ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளில், டிஆர்ஐ அதிகாரிகள் சுமார் 25 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்யது இரண்டு பயணிகளைக் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள்:

மற்றொரு நடவடிக்கையில், மும்பை துறைமுகத்தில் 9,230 தடைசெய்யப்பட்ட மின்னணு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.3.70 கோடி ஆகும்.

மிசோரம் மாநிலத்தில், இந்திய-மியான்மர் எல்லையருகே உள்ள சந்தேகத்திற்குரிய நான்கு கிடங்குகளை, அசாம் ரைபிள்ஸ் படையினரின் உதவியுடன், டிஆர்ஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 14.5 மெட்ரிக் டன் கசகசாவை அவர்கள் மீட்டெடனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ₹3.6 கோடி ஆகும்.

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ் கசகசா விதைகள் ‘கட்டுப்படுத்தப்பட்ட’ பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply