ஏர் மார்ஷல் தேஜ்பால் சிங் இன்று (2026 ஆகஸ்ட் 1) விமானப் படைத் துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வின்போது, அவர் தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, தேச சேவைக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
1990 ஜூன் 16 அன்று போர் விமானியாகப் பணியில் சேர்ந்த இந்த ஏர் மார்ஷலுக்கு, 3500 மணி நேரத்திற்கும் மேலான விமானப் பயண அனுபவம் உள்ளது. இவர் ‘கேட் ஏ’ தகுதி பெற்ற விமானப் பயிற்றுநர் ஆவார். அவர் விமானப் படையில் முக்கிய செயல்பாட்டு, கட்டளை, பணியாளர் பதவிகளை வகித்துள்ளார்.
அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி, அவருக்கு ஜனவரி 2011-ல் வாயு சேனா பதக்கமும், ஜனவரி 2021-ல் அதி விசிஷ்ட சேவா பதக்கமும் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. நாட்டிற்கு 39 ஆண்டுகள் பெருமைமிக்க, சிறப்பான சேவையாற்றி, 31 ஜூலை 26 அன்று ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பார்திக்குப் பதிலாக, ஏர் மார்ஷல் தேஜ்பால் சிங் விமானப் படைத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
எம்.பிரபாகரன்
