உக்ரைன் நாட்டின் இரண்டாவது மிகப்பெரும் நகரமான
கார்கீவ் அருகே, ரஷ்ய நாட்டின் Su-35 S ரக போர் விமானத்தை உக்ரைன் படை வீரர்கள் நேற்று (03/04/2022) சுட்டு வீழ்த்தினர். இது ரஷ்யாவின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றாகும். இந்த வகை விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் நாட்டின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. 48 மணி நேரத்திற்குள் தமது பராக்கிரம சக்தியால் உக்ரைன் நாட்டை சூறையாடி, அந்நாட்டு படை வீரர்களையும், ஆட்சியாளர்களையும், பொதுமக்களையும் அடிபணிய வைத்து விடலாம் என்ற அதீத நம்பிக்கையில் 3 நாட்களுக்கு மட்டுமே தேவையான ஆயுதங்கள், உணவு பொருட்களுடன் உக்ரைன் வான் பரப்பிலும், நிலப்பரப்பிலும் கால் பதித்த ரஷ்ய ராணுவ படையினர்; உக்ரைன் படைவீரர்களின் எதிர் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இன்று (04/04/2022) வரை அங்கு திணறி வருகின்றனர்.
இப்போரில் இதுவரை 18,300 ராணுவ வீரர்களையும், 647 டாங்கிகள், 1844 போர் கவச வாகனங்கள், 437 ஆர்டில்லரி அமைப்புகள், 54 விமான எதிர்ப்பு போர் அமைப்புகள், 147 போர் விமானங்கள், 134 ஹெலிகாப்டர்கள், 92 தந்திரோபாய செயல்பாட்டு நிலைகள், 1273 வாகனங்கள், 76 எரிபொருள் நிரப்பும் டேங்கர்கள், 7 படகுகள், 25 சிறப்பு உபகரணங்கள், 4 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகியவற்றை ரஷ்ய ராணுவம் பறிக்கொடுத்துள்ளது.
இத்தனை இழப்புகளை சந்தித்த பிறகும் கூட; ரஷ்ய ராணுவ தலைமை யுத்தத்தை அங்கு நிறுத்துவதாக தெரியவில்லை.
இந்நிலை அங்கு தொடர்ந்து நீடித்தால் இவற்றின் பாதிப்பு பன்னாட்டு வர்த்தக மற்றும் பொருளாதாரத்தில் மிகபெரிய தாக்கத்தையும், பினனடைவையும் நிச்சயம் உண்டாக்கும்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பிடிவாத குணத்தால் மூன்றாவது உலக யுத்தம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
