ராஜஸ்தான் மாநிலம், பார்மர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மேவரம் ஜெயின் என்பவர், தனது தொகுதி இளைஞர்களுக்கு (கொரோனா -COVID-19) தடுப்பூசி போடுவதற்கு, தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 3 கோடி வழங்குவதாக இன்று அறிவித்து; அதற்கான கடிதத்தை ராஜஸ்தான் மாநில அரசுக்கு அனுப்பி வைத்தார்.
இதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட ராஜஸ்தான் மாநில வருவாய் துறை அமைச்சர் ஹரிஷ் சவுத்ரி, பார்மர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்து, அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் பார்மர் தொகுதி இளைஞர்கள் அனைவரும் (கொரோனா -COVID-19) தடுப்பூசிகளை இலவசமாக பெற முடியும்.
‘கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் அனைவரும் உயிர் பிழைத்தால் போதும்; மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ -என்று முடிவு எடுத்த பார்மர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மேவரம் ஜெயினை, தொகுதி மக்கள் உள்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெஹ்லோட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைப்பெற்று வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
