தமிழகம் முழுவதும் “கரோனா வைரஸ்” தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக பள்ளி, கல்லூரிகள், தங்கும் விடுதிகள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தின் பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றான ஏற்காட்டில் செயல்பட்டு வரும் 200-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் மூடப்பட்டு வருகின்றன.
மேலும், ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களான அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், படகு இல்லம் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளது. சாலையோர தள்ளு வண்டி கடைகள் கூட மூடப்பட்டுள்ளன. இதனால் ஏற்காடு சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
-நே.நவீன் குமார்.
