‘மழை பாதிப்பு புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டும் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய், மழை பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் விஜய் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply