இந்திய கடற்படைக் கப்பல் சுதர்ஷினி, ஓமன் பயணத்தை நிறைவு செய்தது.

இந்தியக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ். சுதர்ஷினி, தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமான ‘லோக்காயன்-2026’-ன் ஒரு பகுதியாக, 2026 அக்டோபர் 14 முதல் 17 வரை ஓமனில் மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டது . இந்தப் பயணம், இந்தியக் கடற்படையின் வளமான கடல்சார் பாரம்பரியத்தையும், கடற்படைப் பயிற்சியாளர்களிடையே தொழில்முறை திறன், மனவுறுதி, தலைமைத்துவத்தை வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.

துறைமுகப் பயணத்தின் போது, தொழில்முறை கலந்துரையாடல்களும் விளையாட்டு நிகழ்வுகளும் இந்தியக் கடற்படைக்கும் ஓமன் கடற்படைக்கும் இடையேயான உறவுகளை மேலும் பலப்படுத்தின.

லோக்காயன்-2026 திட்டம் அதன் பத்தாவது மாதத்தில் முன்னேறிச் செல்லும் வேளையில், ஐஎன்எஸ் சுதர்ஷினியின் பயணம், இந்தியக் கடற்படையின் அர்ப்பணிப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. சர்வதேசக் கடல் பரப்புகளில் பயணிக்கும் இக்கப்பல், இந்தியாவின் நல்லெண்ணத்தையும் கடல்சார் ஒத்துழைப்பையும் வளர்க்கிறது.

Leave a Reply