பயங்கரவாதத்தின் முழு அமைப்பையும் தகர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம்! – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

அமைதிக்கும், வளர்ச்சிக்கும் மிக மோசமான அச்சுறுத்தல்களில் ஒன்றாகப் பயங்கரவாதம் உள்ளது என்று கூறியுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்தின் முழுமையான அமைப்பைத் தகர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர், இன்று (2026 அக்டோபர் 20) தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் மன்றத்தின் 25-வது கூட்டத்தில் உரையாற்றினார்.

பயங்கரவாதம் அப்பாவி உயிர்களைப் பறிப்பதோடு, முதலீட்டையும் வர்த்தகத்தையும் சீர்குலைக்கிறது என்று அவர் கூறினார். மேலும்  இளைஞர்களுக்கு உரிமையுடன் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளையும் இது பறிக்கிறது என்று அவர் தெரிவித்தார். பயங்கரவாதத்தில் எந்த நியாயமும் இல்லை எனவும், அதைக் கையாள்வதில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என்று அவர் கூறினார்.

பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பவர்கள், ஆதரவளிப்பவர்கள் அல்லது அவர்களுக்குப் புகலிடம் அளிப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறினார்.

Leave a Reply