|
தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்று சுதர்சன நாச்சியப்பன் திடீரென இப்படி அதிரடியாக கூறியிருப்பது காங்கிரசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இன்று (09.09.2013) செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு அவர் கூறினார். தமிழர்களுக்கு சொந்தமான பூமி இலங்கை என்று தெரிவித்த நாச்சியப்பன், தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்றார். இஸ்ரேல், பாலஸ்தீனம் போன்று தமிழர்களின் பகுதியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழீழக் கனவை நாம் நனவாக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு நாம் பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்கள் சீனா சென்று விடுவார்கள். இலங்கை மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுக்கும் நிலை உருவாகும். இதை தடுக்கவே அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கடந்த 23.06.2013 அன்று கோவையில் இதே சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். இந்திய பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் இது போன்ற நாடகங்கள் இனி அடிக்கடி அரங்கேறும். |
