உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம்!

சமாஜ்வாதி  கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ்.

Samajwadi Party news B
Samajwadi Party news1

Samajwadi Party news F1

சமாஜ்வாதி  கட்சியில் இருந்து உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை ஆறு ஆண்டுகள் நீக்கம் செய்து அக்கட்சித் தலைவர் முலாயம் சிங்திடீர்அறிவிப்பு செய்துள்ளார்.

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்.

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்.

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும்அவரது தந்தையும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும், சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. குறிப்பாக சட்டசபை தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடும்  வேட்பாளர்கள் பட்டியலை முலாயம் சிங் அறிவித்தார். அதில் அகிலேஷின் ஆதரவாளர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை.

இதற்கு போட்டியாக அகிலேஷ் யாதவ் 35 பேர் கொண்ட தனிபட்டியல்  ஒன்றை வெளியிட்டார்இது பிரிவை அதிகமாக்கியது.

இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கைளில்  ஈடுபட்டதால். ஒழுங்கீன நடவடிக்கையாக அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்படுவதாக முலாயம் சிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-எஸ்.சதிஸ் சர்மா.