உத்தரகண்டில் 6.59 கி.மீ. நீள ரயில்வே சுரங்கப்பாதை பணி நிறைவு – இந்திய ரயில்வே புதிய சாதனை!

உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரிஷிகேஷ் – கர்ணபிரயாக் ரயில் திட்டத்தில், 6.59 கி.மீ. நீளமுள்ள 14-வது சுரங்கப்பாதையின் இரு முனைகளையும் இணைக்கும் முக்கியப் பணி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. சுமேர் பகுதியில் 4.7 கி.மீ. தொலைவிலும், மரோரா பகுதியில் 1.79 கி.மீ. தொலைவிலும் மேற்கொள்ளப்பட்ட சுரங்கப்பாதை அகழ்வுப் பணிகள் தற்போது ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

குடியிருப்புப் பகுதிகளுக்கு அடியில் தளர்வான மண் மற்றும் பாறைகள் நிறைந்த நிலப்பரப்பில் பாதுகாப்பான முறையில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக நவீன தொழில்நுட்பங்கள், சிறப்பு காற்றோட்ட வசதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்புப் பணிகள் பயன்படுத்தப்பட்டன.

இந்தச் சாதனை ரிஷிகேஷ் – கர்ணபிரயாக் ரயில் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இத்திட்டம் நிறைவு பெறுவதன் மூலம் உத்தரகண்ட் மாநிலத்தின் மலைப்பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து மேம்படுவதுடன், ஆன்மிகப் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயணமும் எளிதாகும். மேலும், மாநிலத்தின் பிராந்திய வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும்.

Leave a Reply