பிரதமர் நரேந்திர மோதி ஃபிக்கி வருடாந்திர பொதுக்கூட்டம், மாநாட்டை தொடங்கி வைத்தார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (ஃபிக்கி) வருடாந்திர கூட்டத்தையும், மாநாட்டையும் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது ஃபிக்கியின் நூற்றாண்டு விழாவையொட்டி கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இதற்கு முன்பும் பலமுறை ஃபிக்கி நிகழ்ச்சிகளில் தாம் பங்கேற்றிருந்தாலும் இந்த நூற்றாண்டு அம்சம் மிகவும் சிறப்பானது என்று கூறினார். கடந்த 100 ஆண்டுகளாக விழிப்புணர்வுடன் செயல்பட்டு, காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு இந்தியப் பொருளாதார பயணத்திற்கு ஃபிக்கி ஆற்றிய பங்களிப்பை அவர் பாராட்டினார்.

கடந்த நூற்றாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் பயணம் குறித்து எடுத்துரைத்த பிரதமர் கடந்த 12 ஆண்டுகளில் குடிமக்கள், இளையோர், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்துறையினர் ஆகியோரின் கடின உழைப்பு பொருளாதாரச் சூழலை மாற்றியமைத்ததாக எடுத்துரைத்தார். தற்போது இந்தியாவின் முன்னேற்றம் விரைவாக உள்ளதென்றும், வறுமையிலிருந்து மிக விரைவாக மக்கள் மீட்கப்படுவதாகவும் பிரதமர் திரு மோடி கூறினார்.

உலக வங்கி  அண்மையில் அளித்த அறிக்கையின்படி, வெறும் 12 முதல் 13 ஆண்டுகளில் இந்தியர்களில் 50 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த அம்சம் நாட்டிற்கு பெறுமை அளிப்பதாக தெரிவித்தார் .இந்த அறிக்கை நம் அனைவருக்கும் பெருமிதத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.

உரிய கொள்கைகளுடன், கடந்த 12 முதல் 13 ஆண்டுகளில் 50 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்படுவதாக கூறிய பிரதமர் இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி குறித்து மதிப்பீடு செய்தார். இந்தியா தற்போது  பயணிக்கும் பாதை சரியானது, துல்லியமானது என்றும் நாட்டின் வெற்றியை உறுதிப்படுத்தக்கூடிய பாதை என்பதை இது காட்டுவதாகவும் பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார்.

உலகின் மிக விரைவாக வளர்ச்சியடைந்து வரும் முக்கியப் பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதையும் பல்வேறு முக்கிய அமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சுமார் 7 சதவீதமாக இருக்குமென்று கணித்துள்ளதையம் பிரதமர் சுட்டிக்காட்டினார். அத்துடன்,  அக்டோபர் மாதத்தில் சரக்கு ஏற்றுமதி சுமார் 50 பில்லியன் டாலர் என்ற சாதனையை அடைந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார். இது போன்ற சிறப்பான செயல்பாடுகளால் உலக அளவிலான நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்புகளை உயர்த்தியுள்ளதாக கூறினார். மூடிஸ் தர வரிசை, எஸ் அண்ட் பி உலக தர வரிசை, ஃபிட்ச் தர வரிசை, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை  இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்புகளை உயர்த்தி மாற்றியமைப்பதாக திரு மோடி தெரிவித்தார்.

உருவாக்கப்பட்ட துறைகளையும் குறுகிய கால லாபங்களையும் மட்டும் சார்ந்திருக்காமல், தனிநபர்கள், தொழில்துறை, நாடுகள் ஆகியவை  காலமுறையில் சுயபரிசோதனை செய்வதன் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ‘உத்தரேத் ஆத்மன ஆத்மனம், நா ஆத்மனம் அவ்சதாயேத்’ என்ற பண்டைய வேத வசனத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஃபிக்கி தமது நூற்றாண்டு கால சாதனைகளுக்கு அப்பால் அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டங்களைத் வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

Leave a Reply