இந்தியா மற்றும் இத்தாலி நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தின் 23-வது அமர்வு 2026 நவம்பர் 18 அன்று இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு இந்தியாவின் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் இத்தாலியின் துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சருமான திரு. அன்டோனியோ தஜானி ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.
இக்கூட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை உறவுகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
வாகனத் தொழில்துறை, விண்வெளி, தொழில்துறை 4.0, வேளாண்மை, வேளாண் தொழில்நுட்பம், போக்குவரத்து, எரிசக்தி, முக்கிய கனிமங்கள், அறிவியல், புதுமைக் கண்டுபிடிப்பு, கலாச்சாரம், சுற்றுலா, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், 2025–2029 ஆம் ஆண்டிற்கான கூட்டு உத்திசார் செயல்திட்டத்தின் அடிப்படையில், இந்தியா–இத்தாலி இடையிலான சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்த இரு நாடுகளும் உறுதிபூண்டன.
குறிப்பாக, 2029 ஆம் ஆண்டிற்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 20 பில்லியன் யூரோவாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் இந்தியா மற்றும் இத்தாலி இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பல்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக அமைந்தது.
திவாஹர்
