2025–26-ம் ஆண்டின் தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தி 3,869.15 லட்சம் டன்னாக இருக்கும்: மத்திய அரசு.

2025-26-ம் ஆண்டிற்கான தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பளவு, உற்பத்தி தொடர்பான 3-வது முன்கூட்டிய மதிப்பீடுகளை மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ்சிங் சௌகான் இன்று வெளியிட்டார். இது நாட்டின் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் செய்தியாக உள்ளது. அண்மைக்கால மதிப்பீடுகளின்படி, நாட்டின் மொத்த தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தி 2025-26-ம் ஆண்டில் 3,869.15 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024-25-ம் ஆண்டில் பதிவான 3,707.38 லட்சம் டன்களுடன் ஒப்பிடும்போது 161.77 லட்சம் டன்கள் அல்லது 4.36 சதவீதம் அதிகமாகும். இந்த வளர்ச்சி மதிப்பீடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அமைச்சர் திரு சிவ்ராஜ்சிங் சௌகான், தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, விவசாயிகளின் கடின உழைப்பையும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் விவசாயிகளுக்கான அரசின் கொள்கைகளின் தாக்கத்தையும் பிரதிபலிப்பதாகக் கூறினார்.

இந்த சாதனை அளவிலான உற்பத்தி நாட்டின் ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, தோட்டக்கலைப் பயிர்கள் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் நேரடியாக பங்களிக்கும் என்றும் தெரிவித்தார். விவசாயிகளின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், இந்திய வேளாண் சமூகத்தின் அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் இந்த வளர்ச்சி பிரதிபலிப்பதாக கூறினார்.

Leave a Reply