இந்தியா- ஜப்பான் கடல்சார் பயிற்சியில் பங்கேற்ற ஐஎன்எஸ் சயாத்ரி கப்பல்.

இந்திய கடற்படை கப்பலான சயாத்ரி, ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையுடன் இணைந்து 2026 நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் கடல்சார் பயிற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டது. இருநாட்டு கடற்படையை வலுப்படுத்தும் வகையில், கடல்சார் பயிற்சியில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை இந்த பயிற்சி வழங்கியது. இந்த பயிற்சியின்போது, ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையில் இடம்பெற்றுள்ள ஜேஎஸ் ஐஸ் கப்பல் உடன் இணைந்து, ஐஎன்எஸ் சயாத்ரி கப்பல் கடல்சார் செயல்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.  போர் தந்திரங்கள், தொழில்நுட்ப ரீதியிலான பயிற்சிகள், தகவல் தொடர்பு, கப்பலின் மேல்தளத்தில் தரையிறங்குதல் போன்ற பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பிலும் பரஸ்பர புரிதல், திறன் மேம்பாடு போன்றவற்றுக்கான வாய்ப்புகளையும் இந்த கடல்சார் பயிற்சி வழங்கியது. மேலும், தங்களுடைய போர்முறைகள், திறமைகளை இருதரப்பும் பரிமாறிக் கொள்ளவும், இரு கடற்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்த பயிற்சி உதவியது. இந்த பயிற்சியில் ஐஎன்எஸ் சயாத்ரி கப்பல் பங்கேற்றதன் மூலம், இந்தியா- ஜப்பான் கடல்சார் நட்புறவு மேலும் வலுப்படும். இத்தகைய பயிற்சிகள் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தவும், பயிற்சி முறைகளை மேம்படுத்தவும், கடல்சார் துறையில் ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் வழிவகை செய்கின்றன. இந்தியா- ஜப்பான் கூட்டண்மை இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.      

Leave a Reply