நாட்டில் சட்ட விரோத செயற்கை போதைப்பொருள் தயாரிப்புக்கெதிரான நடவடிக்கைகளை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜலான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த செயற்கை போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகத்திலிருந்து 1,100 கிலோ போதைப்பொருட்கள் அதற்கான மூலப்பொருட்கள், தயாரிப்பு உபகரணங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உளவுத்துறை அளித்த தகவலின்பேரில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த செயற்கை போதைப்பொருள் ஆய்வகத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
எஸ்.சதிஸ் சர்மா
