முதலமைச்சர் கோப்பை பரிசளிப்பு விழா: முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு உற்சாக வரவேற்பு!

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாநிலம் முழுவதும் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

அனைத்து தரப்பினரையும் விளையாட்டில் ஈடுபடுத்துவதையும், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டு இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மேலும், போட்டிகளில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களைப் பாராட்டி, அவர்களின் திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதுடன், பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

இந்தப் பரிசளிப்பு விழாவில், போட்டிகளில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Leave a Reply