இந்திய கடற்படையிடம் DSC A21 டைவிங் ஆதரவுக் கப்பல் ஒப்படைப்பு!

இந்திய கடற்படையின் Diving Support Craft (DSC) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட DSC A21 என்ற கப்பல், 2026 நவம்பர் 20 அன்று மும்பையில் உள்ள Naval Dockyard-இல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இக்கப்பல் கொல்கத்தாவைச் சேர்ந்த Titagarh Rail Systems Limited (TRSL) நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

இக்கப்பல் Catamaran Hull எனப்படும் இரட்டை அடிப்பகுதி அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், நவீன டைவிங் உபகரணங்கள், அதிக நிலைத்தன்மை, விரிவான தளப்பரப்பு மற்றும் கடல் அலைகளைச் சமாளிக்கும் மேம்பட்ட திறன் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்திய கடற்படையின் விதிமுறைகளுக்கு ஏற்ப, Indian Register of Shipping (IRS) விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் இக்கப்பல் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பின்போது Hydrodynamic Analysis மற்றும் Model Testing ஆகிய தொழில்நுட்ப ஆய்வுகளை விசாகப்பட்டினத்தில் உள்ள Naval Science and Technological Laboratory (NSTL) மேற்கொண்டது.

DSC A21 கப்பல் இந்திய கடற்படையின் நீர்மூழ்கி வீரர்களுக்கான ஆதரவு, நீருக்கடிப் பரிசோதனை, கடலில் மூழ்கிய பொருட்களை மீட்பதற்கான உதவி மற்றும் கடலோரச் செயல்பாடுகள் போன்ற திறன்களை மேம்படுத்தும்.

இக்கப்பல் இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் (Ministry of Defence) Make in India திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு முக்கியப் படைப்பாகும்.

Leave a Reply