துளி’ இயக்கம்: மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த ‘துளி’ இயக்கத்துக்கான இலச்சினையைத் திறந்து வைத்த முதல்வர் விஜய், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘தமிழக முதல்வர் விஜய் இன்று (அக்.21) நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சென்னை, சேப்பாக்கம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த ‘துளி’ இலச்சினையைத் திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மாதிரி இல்லத்தைப் பார்வையிட்டார்.

Leave a Reply