புலிகள் வாழும் இடங்கள், ளவாழ்வாதாரம், வருவாய் ஈட்டலுக்கான தூண்களாக பாதுகாப்பு, உயிரிப் பொருளாதாரம், சூழல் சுற்றுலா என்ற கருப்பொருளில் இரண்டு நாள் சர்வதேச பயிலரங்கை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இன்று தொடங்கி வைத்தார்.
இப்பயிலரங்கை சர்வதேச புலிகள் கூட்டமைப்பு, ஆசிய வளர்ச்சி வங்கி, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.
புலிகள் வாழும் பகுதிகளை முக்கிய இயற்கை மூலதனமாக அங்கீகரித்தல், சூழல் அமைப்பு சேவைகளின் மதிப்பை முதன்மைப்படுத்துதல், பாதுகாப்பு, உயிரிப் பொருளாதாரம், சூழல் சுற்றுலா போன்றவை எவ்வாறு நீடித்த வாழ்வாதாரம், உள்ளூர் வருவாய் ஈட்டுதல், நீண்டகால சூழலியல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கிய காரணிகளாக அமையும் என்பதை ஆராய்வது ஆகியவற்றில் இப்பயிலரங்கின் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும்.
இதில் தொடக்க அமர்வில் உரையாற்றிய திரு யாதவ், புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இந்தியா மேற்கொண்டு வரும் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.
புலிகளின் வாழ்வு என்பது காடுகள், புல்வெளிகள், ஆறுகள், வனவிலங்குப் பகுதிகள், உள்ளூர் சமூகத்தினர் ஆகியவற்றுடன் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
நீர் பாதுகாப்பு, கார்பன் சேமிப்பு, பருவநிலை ஒழுங்குமுறை, பல்லுயிர் பாதுகாப்பு, வாழ்வாதார ஆதரவு போன்ற முக்கிய சூழல் அமைப்பு சேவைகளை அளிக்கும் புலிகள் வாழும் பகுதிகள் மதிப்புவாய்ந்த இயற்கை மூலதனமாகத் திகழ்கிறது என்று கூறினார்.
எம்.பிரபாகரன்
