இந்திய விமானப்படை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, ஏர் வைஸ் மார்ஷல் சக்தி சர்மா, இந்திய பாதுகாப்புப் படைகளில் ஏர் வைஸ் மார்ஷல் அல்லது அதற்கு இணையான பதவியை அடைந்த மருத்துவம் சாராத முதல் பெண் அதிகாரி ஆனார். 2026 செப்டம்பர் 01 அன்று, அவர் விமானப்படைத் தலைமையகத்தில் விமானப் படைத் தலைமை அதிகாரியின் (கல்வி) உதவித் தலைவராகப் பொறுப்பேற்றார்.
1994 ஜூன் 18 அன்று இந்திய விமானப்படையின் கல்விப் பிரிவில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற சக்தி ஷர்மா, பயிற்சி நிறுவனங்கள், கள நிலையங்கள், கட்டளைத் தலைமையகங்கள், விமானப்படைத் தலைமையகங்கள் எனப் பலதரப்பட்ட பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
இந்த மைல்கல் சாதனை, இந்தியப் பாதுகாப்புப் படைகளில் பெண் அதிகாரிகளின் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.
திவாஹர்
