16-வது ஏரோ இந்தியா விமான கண்காட்சி பெங்களூருவில் 2027-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறுகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியும், உலகின் முதன்மையான விண்வெளி, பாதுகாப்புத்துறை கண்காட்சிகளில் ஒன்றானதுமான ஏரோ இந்தியாவின் 16-வது கண்காட்சி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் 2027-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி துறையால் நடைபெறும் இக்கண்காட்சி உலகின் முன்னணி விண்வெளி, பாதுகாப்பு நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள், தொழில்துறை சார்ந்தவர்கள் ஆகியோரை ஒரே தளத்தில் இணைக்கிறது.

விண்வெளி, பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், புதுமைக் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் நாட்டின் வளர்ந்து வரும் திறன்களை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய சர்வதேச கண்காட்சியாக ஏரோ இந்தியா உருவாகியுள்ளது.

Leave a Reply