இந்தியக் கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி, லோகாயன் 26 பயணத்தின் ஒரு பகுதியாக ஸ்பெயினின் பார்சிலோனாவை 2026 செப்டம்பர் 1 அன்று சென்றடைந்தது.
அங்கு இக்கப்பலில் சென்றுள்ள இந்திய கடற்படை அதிகாரிகள் ஸ்பெயின் கடற்படையினர், இதர கடல்சார் தொடர்புடையவர்களுடன் தொழில்முறை, கலாச்சார ரீதியான பேச்சுகளில் ஈடுபட உள்ளனர்.
கப்பலில் உள்ள கடல்சார் பயிற்சியாளர்கள் தொழில்முறை ரீதியிலான உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட உள்ளனர்.
ஐஎன்எஸ் சுதர்ஷனி கப்பலை பார்வையாளர்கள் பார்வையிட 2026 செப்டம்பர் 4 அன்று அனுமதிக்கப்படுவார்கள். இது இந்தியாவின் கடல்சார் மரபுகளையும், கடற்படை ஆய்வுகளையும் உணர்வதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும்.
இப்பயணம் இந்தியாவின் கடல்சார் முயற்சிக்கு ஒரு அடையாளமாக விளங்குகிறது. இது உலகளாவிய கடல்சார் நடவடிக்கைகளில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும், தொழில்முறைப் பயிற்சி, கடல் பாய்மர பயணங்களில் சிறந்து விளங்குவதில் இந்திய கடற்படையின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.
எம்.பிரபாகரன்
