வடக்கு ரயில்வேயின் மொராதாபாத் கோட்டத்திலுள்ள எஞ்சிய 712 கிலோ மீட்டர் வழித்தடங்களில் ரூ.170 கோடி செலவில் கவாச் தொழில்நுட்பம் 4.0 நிறுவுவதற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பணி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதன் மூலம் இக்கோட்டத்தின் ரயில்வே பாதுகாப்பின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும். கவாச் 4.0 தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதன் மூலம் அடையாளம் காணப்பட்டப் பிரிவுகளில் ரயில் இயக்கங்களுக்கு மேம்பட்டப் பாதுகாப்பை அளிக்கும்.
கவாச் என்பது ரயில் செயல்பாட்டு பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கபட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாகும். இது, அபாயகரமான தருணத்தில் சிக்னலைக் கடந்து செல்வதைத் தடுக்கிறது. பாதுகாப்பற்ற சூழலைத் தவிர்க்க தேவைப்படும்போது பிரேக்குகளை தாமாகவே பயன்படுத்துகிறது. இக்கட்டான சூழல்களில் ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்தி மோதல் ஏற்படுவதற்கான இடர்பாட்டைப் பெருமளவு தவிர்க்கிறது.
எம்.பிரபாகரன்
