அசாமின் பால்வள துறைக்கும், வடகிழக்கு பிராந்தியத்தின் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதிகளுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, அசாம் 5,627 லிட்டர் புரபி ஐஸ்கிரீமை பூடானுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது அம்மாநிலத்தின் முதல் சர்வதேச சரக்கு ஏற்றுமதியாகும். இது பிராந்தியத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பால் ஏற்றுமதிகளுக்கு புதிய வழிகளைத் திறந்துள்ளது.
இந்த ஏற்றுமதி சரக்குகளை அஸ்ஸாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 2026 ஜூலை 28 அன்று குவஹாத்தியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். வடகிழக்கு டெய்ரி அண்ட் ஃபுட்ஸ் லிமிடெட் ஏற்றுமதி செய்யும் இந்தச் சரக்கு பூட்டான் முழுவதும் உள்ள முக்கிய சந்தைகளுக்கு புரபி ஐஸ்கிரீமை வழங்கும், இதில் திம்பு, பாரோ, ஃபூண்ட்ஷோலிங் மற்றும் வாங்டு ஆகியவை அடங்கும், இது அசாம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்திலிருந்து அண்டை சர்வதேச சந்தைகளில் பால் பொருட்களின் இருப்பை வலுப்படுத்தும்.
மேற்கு அசாம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தயாரித்து, வடகிழக்கு பால் மற்றும் உணவுகள் நிறுவனம் புரபி ஐஸ்கிரீமை அசாம் முழுவதும் விநியோகிக்கிறது.
பூட்டானில் சில்லறை நுகர்வோர் மற்றும் நிறுவனங்களுக்கு பல்வேறு வகைகளில் ஐஸ்கிரீம்கள் வழங்கப்படும்.
எம்.பிரபாகரன்
