கொழும்பு பாதுகாப்பு மாநாடு 3 நாள் பயிற்சி விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்தது.

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட மூன்று நாள் பயிற்சி, 2026 செப்டம்பர் 12 அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை கமாண்டில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளைத் தடுப்பதை மையமாகக் கொண்டு, கிழக்கு கடற்படைக் கமாண்டின் தலைமைப் பணியாளர் அதிகாரி ரியர் அட்மிரல் மனோஜ் ஜாவின் தொடக்கவுரையுடன் 2026 செப்டம்பர் 09 அன்று இந்த பயிற்சி தொடங்கியது.

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு அமைப்பின் உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுக்களும் கடல்சார் பாதுகாப்பு நிபுணர்களும் 72 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை பயிற்சி, கடல்சார் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தல் உள்ளிட்ட சிக்கலான, மரபுசாரா பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தின.

பங்கேற்பாளர்கள், கூட்டு கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக, தற்போதுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை ஆய்வு செய்து, தகவல் பகிர்வு ஏற்பாடுகளை நெறிப்படுத்தினர்.

Leave a Reply