மேகதாதுவில் அணைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மேகதாது அணை பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒத்தக்கருத்தோடு ஒரே நிலையில் குரல் கொடுக்க வேண்டும்.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையிலே, குடிதண்ணீர் பிரச்சனையிலே மத்திய அரசினுடைய இத்துறை சம்பந்தப்பட்ட துணை அமைச்சர் அவர்கள் பாராளுமன்றத்திலே காவிரி நீர் குறித்து பதில் அறிக்கையில் பொறுப்பற்ற முறையில் கூறியிருப்பது, பொறுப்புள்ள அமைச்சருடைய நியாயமான நடுநிலையான செயலாக இல்லை.
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் நீர்வளத்துறை தங்களுடைய தவறான நிலைப்பாட்டை திருத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) வலியுறுத்துகிறது.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
