ஜார்கண்ட் மாநிலத்தின் கோட்டா மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் ஆய்வு செய்தது.

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) கொல்கத்தா மண்டல அலுவலகம், ஜார்கண்ட் மாநிலம் கோட்டா மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தியோகர், கோட்டா, தும்கா மாவட்டங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த ஜூன் மாதம் கள ஆய்வு மேற்கொண்டு மொபைல் நெட்வொர்க் சேவையின் தரத்தை மதிப்பீடு செய்துள்ளது. குரல் அழைப்பு, தரவு சேவை, சிக்னல் கிடைக்கும் தன்மை, அழைப்பு துண்டிப்பு, பதிவிறக்க, பதிவேற்ற வேகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இதன் முடிவுகள் தற்போது வெளியிட்டுள்ளது.

ஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களின் சேவைகள் இதில் மதிப்பிடப்பட்டன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மொபைல் பயனர்களின் விழிப்புணர்வுக்காகவும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் சேவையை மேம்படுத்தவும் இந்த விவரங்கள் பயனுள்ளதாக இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களின் பகுதிகளில் உள்ள நெட்வொர்க் நிலவரங்களை இதன் மூலம் துல்லியமாக அறிந்துகொள்ளலாம். இது குறித்த முழுமையான அறிக்கை ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply