இந்தியாவின் முன்னோடி மையப்படுத்தப்பட்ட (ஹப் & ஸ்போக்) விமான நிலையக் கட்டமைப்பின் கீழ், சர்வதேச பயணிகள் போக்குவரத்திற்காக இணைக்கப்படும் நாட்டின் இரண்டாவது விமான நிலையமாக அமிர்தசரஸ் விமான நிலையம் உருவாகியுள்ளது. இதற்கான சர்வதேச விமானச் சேவைகளை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று தொடங்கியது. நாட்டில் உள்ள முக்கிய மைய விமான நிலையங்கள் வழியாக வரும் பயணிகளுக்கு தடையற்ற சர்வதேச விமான இணைப்புகளை அளிப்பதன் மூலம் இந்தியாவின் உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக திகழச் செய்யும் அரசின் முயற்சியின் அடுத்தக் கட்டமாக இது அமைந்துள்ளது.
2026-ம் ஆண்டு ஜூன் 25 அன்று வாரணாசியிலிருந்து இந்தியாவின் முதலாவது மையப்படுத்தப்பட்ட (ஹப் & ஸ்போக்) விமானச் சேவைகள் வெற்றிகரமாக தொடங்கியுள்ள நிலையில், தற்போது இச்சேவை அமிர்தசரஸிலும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக இத்திட்டம் முறையாகச் செயல்பட்டு சாத்தியக்கூறுகளை நிரூபித்த நிலையில் பயணிகளிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்தது. இக்காலகட்டத்தில் வாரணாசியிலிருந்து புறப்பட்ட பயணிகள் தில்லி வழியாக 18 சர்வதேச பகுதிகளுக்கு தடையின்றி சென்றனர். இது சர்வதேசப் பயணத்தை எளிதாக்குவதில் அதன் செயல்திறனை உறுதிப்படுத்துகிறது.
எஸ்.சதிஸ் சர்மா
