ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். பிரதமர் மோடிக்கு தனது ராஜினாமா கடிதத்தை தர்மேந்திர பிரதான் அனுப்பி வைத்தார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அளித்தல், கடந்த 20ம் தேதி டெல்லியில் நடந்த ‘சலோ சன்சாத்’ பேரணியில் அமைதியாக பங்கேற்ற மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் ஆகிய 3 முக்கிய கோரிக்கைகளை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வலியுறுத்தி வந்தது.
பிரதான் பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடரும் என தெரிவித்திருந்தது சி.ஜே.பி. பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் உறுதியாக இருந்தன. தர்மேந்திர பிரதான் ராஜினாமா நிபந்தனையால் நாடாளுமன்றம் 5 நாள் முடங்கியது. பிரதான் ராஜினாமாவை தவிர வேறு எதையும் ஏற்கப் போவதில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதவி விலகுவதாக பிரதான் அறிவித்துள்ளார்.
எஸ்.சதிஸ் சர்மா
