தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளம்பெருக்கு போன்ற மிகவும் சவாலான சூழலில், 2026 ஜூலை 22 நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்ட 11 மீட்பு நடவடிக்கைகளின் மூலம், டாமன், தத்ரா & நாகர் ஹவேலி, தெற்கு குஜராத் ஆகிய பகுதிகளில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 170 பேரை, இந்தியக் கடலோரக் காவல் படை, உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து மீட்டுள்ளது.
ஜூலை 22/23 ஆகியத் தேதிகளில், இரவு சில்வாஸாவின் கான்வெல் பகுதியில் சிக்கியிருந்த ஐந்து பேரை மீட்கும் பணியுடன் இந்த மீட்பு நடவடிக்கைகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடையா கடற்கரைப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஆற்றின் கரைப் பகுதியில் சிக்கியிருந்த மூன்று மீனவர்கள், பத்திரமாக வெளியேற்றப் பட்டனர். மிகப்பெரிய மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, சாலைத் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்த வெல்ஸ்பன் தொழிற்பேட்டையில், வெள்ளம் சூழ்ந்திருந்ததன் காரணமாக, அப்பகுதியில் சிக்கியிருந்த 60 பேர் ஜூலை 23/24 இரவு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா
