இந்தியா – இஸ்ரேல் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை.

இந்தியா – இஸ்ரேல் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை புதுதில்லியில் 2026 ஜூலை 20ம் தேதி முதல் 23-ம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற்றது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் குறித்து இரு தரப்பினரும் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

சமச்சீரான, விரிவான, பரஸ்பர நன்மை பயக்கும் ஒப்பந்தம் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். 2025 நவம்பரில் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான இருதரப்பு வர்த்தக பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்தும் அவர்கள் பேச்சு நடத்தினர்.

2025-26-ம் ஆண்டில் இந்தியா – இஸ்ரேல் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 3.93 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இதனை மேலும் அதிகரிப்பது குறித்து நான்கு நாள் பேச்சுவார்த்தையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தியா சார்பில் இதில் வர்த்தகத்துறையின் கூடுதல் செயலாளர் திரு அஜய் படு பங்கேற்றார். இஸ்ரேல் சார்பில் அந்நாட்டு பொருளாதார அமைச்சகத்தின் மூத்த இயக்குநர் திரு இஃபாத் அலோன் பெரள் கலந்து கொண்டார்.

Leave a Reply