தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு.

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவினர் சந்தித்தனர். தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தியை தொடங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் தனது உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவது பற்றியும், தற்போது நிறுவியுள்ள உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கம் தொடர்பாகவும், இனிவரும் காலங்களில், உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள விரிவாக்கத் திட்டங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply