இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ராணுவம், பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கூட்டுத் தீர்மானம்.

இந்தியா, ஆஸ்திரேலியா பிரதமர்களாகிய நாங்கள் எங்களுடைய நெருக்கமான இருதரப்பு உறவுகளால் ஒருங்கிணைந்து நமது நாடுகளின் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதிலும் வெளிப்படையான, அமைதியான, நிலையான, வளமையான இந்தோ – பசிபிக் பிராந்தியத்திற்கான பொதுவான நோக்கத்துடனும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த இந்தக் கூட்டுத் தீர்மானத்திற்கு எங்கள் அர்ப்பணிப்பை உறுதி செய்கிறோம்.

2020-ல் ஏற்படுத்தப்பட்ட நமது விரிவான உத்திசார் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். நமது விரிவான உத்திசார் கூட்டாண்மை தொடங்கப்பட்டது முதல் உத்திசார் ஒருங்கிணைப்பு விரைவுபடுத்தப்பட்டுள்ளது. நம்முடைய பொருளாதார உறவுகள் வலுவடைந்துள்ளன. நம் மக்களுக்கு இடையேயான தொடர்புகள் நாடுகளுக்கு இடையேயான இணைப்புகள் ஆகியவை வலிமையாகியுள்ளன. குவாட், இதர பலதரப்பு நிறுவனங்கள் போன்ற பிராந்திய கூட்டமைப்புகள் மூலம் இதர கூட்டாளர்கள் உட்பட இருதரப்பு, பலதரப்பு, வகையிலான நமது நெருங்கிய ஈடுபாடு இருநாடுகளுக்கும் பயன் அளித்து நமது பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும், வளமைக்கும் பங்களிக்கிறது என்று குறிப்பிடுகிறோம்.

2009-ம் ஆண்டின் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்த இந்தியா – ஆஸ்திரேலியா கூட்டுத் தீர்மானத்தால் நமது கூட்டாண்மையில் சிறந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும் நாம் பிரதிபலிக்கிறோம். வெளியுறவு அமைச்சர்களின் உரையாடல், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் உரையாடல், பாதுகாப்பு அமைச்சர்கள் உரையாடல் உள்ளிட்ட இருதரப்பு நடவடிக்கைகள் மூலம் கூட்டாண்மைக்கான பங்களிப்புகளை நாம் பாராட்டுகிறோம்.

புவிசார் உத்திசார்ந்த நிச்சயமற்ற தன்மை, பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் ஆகியவை குறித்து கவலையுடன் குறிப்பிடுகிறோம். அனைத்துத் தரப்பினரும் அமைதியாக இணைந்து செயல்பட ஊக்குவிக்கிறோம். சர்வதேச சட்டத்திற்கேற்ப அச்சுறுத்தல் அல்லது படைகளைப் பயன்படுத்துதல் அல்லது வற்புறுத்தல் இன்றி பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்.

சர்வதேச சட்டத்தை பின்பற்றுவதன் அடிப்படையிலான விதிமுறைகள் சார்ந்த கட்டமைப்பு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பை மதித்தல் ஆகியவற்றால் ஒரு வெளிப்படையான நிலையான, வளமையான இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

மாறக்கூடிய உத்திசார் சூழல்களுக்கேற்ப நமது கூட்டாண்மை திகழவேண்டும் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். நம்முடைய மேம்பட்ட ஒருங்கிணைந்த உயர்நிலை ராணுவம் மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மையை விரைவுபடுத்துவதற்கு உறுதியளிக்கிறோம். நமது உத்திசார் நலன்களின் ஒருங்கிணைப்பை பிரதிபலிக்க உத்திசார் பரிமாற்றங்களை தொடர்ந்து வலுப்படுத்துவோம். அத்துடன் அமைச்சர்கள் நிலையிலான சந்திப்புகளை வழக்கமாக நடத்துவோம்.

கூட்டு வலிமையை மேம்படுத்த ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் நீண்ட காலத் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரிக்கிறோம். இந்த ஒத்துழைப்பு இருநாடுகளின் பாதுகாப்பிற்கு பங்களித்தும் பிராந்திய அமைதி, பாதுகாப்பிற்கும், முக்கியப் பங்களிப்பைச் செய்யும்.

Leave a Reply