அரசுப் பதவியை ஒரு சலுகையாகக் கருதாமல், பொறுப்பாகக் கருதும்போது ஜனநாயகம் செழித்து வளரும்: குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்.

இந்தியாவில் விஐபி கலாச்சாரம்: அதிகாரம், சிறப்புரிமை, ஜனநாயகத்திலிருந்து விலகல்” என்ற புத்தகத்தை குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன், இன்று புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில், வெளியிட்டார். இந்தப் புத்தகத்தை எழுதியுள்ள அருணாச்சலப் பிரதேச முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் திரு நபாம் ரெபியா, இணை ஆசிரியர் திரு சந்தீப் குமார் ஆகியோர் ஆராய்ந்திருக்கும் கருப்பொருள், நாட்டில் ஜனநாயக ஆட்சி, பொது வாழ்வின் முக்கிய அம்சத்தை எடுத்துரைத்துள்ளதாக அவர் கூறினார்.

நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒரு சமூகத்தை அரசியலமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார். மக்களுக்கும் பொது அதிகாரம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான உறவில்தான் ஜனநாயகத்தின் அம்சம் அடங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், அரசுப் பதவியை ஒரு சலுகையாகக் கருதாமல், ஒரு பொறுப்பாகக் கருதும் போது ஜனநாயகம் செழித்து வளரும் என்றும் அவர் கூறினார்.

மாபெரும் தெய்வப்புலவரான திருவள்ளுவரை மேற்கோள் காட்டி, உண்மையான தலைமை என்பது அணுகக்கூடிய தன்மை, கருணை, பொறுப்புக்கூறல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது என்று குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். மக்களிடம் அணுகக்கூடியவராகவும் மரியாதைக்குரியவராகவும் இருக்கும் தலைவர்கள் நீடித்த நம்பிக்கையையும் பாராட்டையும் பெறுகிறார்கள் என்று அவர் கூறினார்.

இந்தப் புத்தகத்தில் ஆராயப்பட்டுள்ள கருப்பொருள்கள், அரசுப் பதவியை ஒரு சலுகையாகக் கருதாமல், சேவைக்கான ஒரு கருவியாகக் கருதும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப் போகின்றன என்று திரு சி. பி. ராதாகிருஷ்ணன் கூறினார். பிரமுகர்களுக்கான சிவப்பு ஒளி விளக்குகளை ஒழிக்கும் பிரதமரின் முடிவையும், போக்குவரத்து கட்டுப்பாடுகளால் நீட் தேர்வர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தனது பயணத்தை தாமதப்படுத்திய அவரது சமீபத்திய செயலையும் குறிப்பிட்டு, இத்தகைய நடவடிக்கைகள் மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும், பொது அதிகாரம் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே உள்ளது என்ற கொள்கையை வலுப்படுத்துவதாகவும் குடியரசு துணைத்தலைவர் கூறினார். பிரதமரின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த அவர், “ஒவ்வொரு இந்தியரும் தனிச்சிறப்பு வாய்ந்தவர். ஒவ்வொரு இந்தியரும் ஒரு மிகவும் முக்கியமான நபர் என்று குறிப்பிட்டார். மேலும், “சேவையே உயர்ந்த தர்மம்” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply