குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் 2026 ஜூன் 7 அன்று நகை தயாரிப்பு ஆலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 4 தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. தொழிலாளர்கள் எந்தவொரு பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிக்காமல் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கியதால் விஷவாயு தாக்கி இறந்ததாகக் கூறப்படுகிறது. மீட்புப் படையினர் தொழிலாளர்களை மருத்துவமனையில் சேர்த்த போது அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு குஜராத் தலைமைச் செயலாளர், சூரத் காவல் துறை ஆணையர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திவாஹர்
