ஓமன் அருகே மஸீரா பகுதியில் 2026 ஜூன் 8 அன்று 24 இந்திய கப்பல் சிப்பந்திகளுடன் சென்று கொண்டிருந்த எம்டி மரிவெக்ஸ் கப்பல் பிற்பகல் 2.20 மணி அளவில் ஏவுகனை தாக்குதலுக்குள்ளானது குறித்து மும்பையில் உள்ள இந்திய கடலோரக் காவல் படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அந்த மையம் ஓமன் கடல்சார் தேடுதல் மீட்பு மையத்தைத் தொடர்பு கொண்டு கப்பல் சிப்பந்திகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பணியில் ஈடுபட்டது. மாலை 5 மணி அளவில் ஓமன் கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் 24 இந்திய கப்பல் சிப்பந்திகளும் பாதுகாப்புடன் மீட்கப்பட்டதாக ஓமன் கடல்சார் தேடுதல், மீட்பு மையம் உறுதிபடுத்தியது. மீட்கப்பட்டவர்கள் அனைவரும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பயணித்த கப்பல், ஓமனின் மஸீராவில் நிறுத்தப்பட்டுள்ளது.
எம்.பிரபாகரன்
