ஜல்சக்தி அமைச்சகத்தின் முக்கியமான, நதிகள் இணைப்பு முயற்சிகள் குறித்து குடியரசுத் துணைத் தலைவருக்கு விளக்கப்பட்டது.

மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல், ஜல்சக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ராஜ் பூஷன் சௌத்ரி, துறையின் மூத்த அதிகாரிகள், இன்று (09.06.2026) குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர்.

அப்போது, நீர்வளம், நதிகள் மேம்பாடு, தூய்மை கங்கை போன்ற பல்வேறு முன்முயற்சிகள் குறித்து குடியரசுத் துணைத் தலைவருக்கு விளக்கப்பட்டது.

அரசு, சமூகம், தொழில்துறையினர், சமூக அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான சமூக அணுகுமுறையின் மூலம் நீர் பாதுகாப்பையும் நிலத்தடி நீர் செறிவூட்டலையும் வலுப்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட, இத்துறையின் முதன்மைத் திட்டத்தை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார்.

இந்த கூட்டத்தின் போது, கென்-பெட்வா இணைப்புத் திட்டம், பார்வதி-காளிசிந்த்-சம்பல் இணைப்புத் திட்டம், கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட முக்கிய நதி இணைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் குடியரசுத் துணைத் தலைவருக்கு விளக்கப்பட்டது. நதிகளை இணைப்பது, தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதிலும், வறட்சியைக் குறைப்பதிலும், நீர்ப்பாசனப் பரப்பை விரிவுபடுத்துவதிலும், சமச்சீரான பிராந்திய வளர்ச்சியை உறுதி செய்வதிலும் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.

மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல், இணையமைச்சர் டாக்டர் ராஜ் பூஷன் சௌத்ரி ஆகியோர், 2026 செப்டம்பரில் நடைபெற உள்ள இந்திய சர்வதேச நீர் வார விழாவில் பங்கேற்குமாறு குடியரசுத் துணைத் தலைவருக்கு அழைப்பு விடுத்தனர்.

Leave a Reply