ஏழைகளின் நலனே (ஏழைகளுக்கான நலவாழ்வு முன்முயற்சிகள்) மோடி அரசின் முதன்மை முன்னுரிமையாகும் என்று மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார். ஏழைகளின் நலனில் கடந்த 12 ஆண்டுகளில் வங்கி வசதிகள், நிதிப் பாதுகாப்பு, சுய வேலைவாய்ப்புகள், உணவு தானியத் திட்டம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஜன்தன் கணக்குகள் ஆகியவற்றில் கோடிக்கணக்கான மக்களை அரசு இணைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா கூறியிருப்பதாவது, “ஏழைகளின் நலனே மோடி அரசின் முதன்மை முன்னுரிமையாகும். ஏழைகளின் நலனில் கடந்த 12 ஆண்டுகளில் வங்கி வசதிகள், நிதிப் பாதுகாப்பு, சுய வேலைவாய்ப்புகள், உணவு தானியத் திட்டம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஜன்தன் கணக்குகள், முத்ரா கடன்கள், பிரதமரின் ஸ்வநிதி திட்டம் ஆகியவற்றில் கோடிக்கணக்கான மக்களை அரசு இணைத்துள்ளது. அடிப்படை உள்கட்டமைப்பு, சமூகப் பாதுகாப்பு, சிறந்த வாழ்வாதாரம் மூலம் நாட்டில் ஏழை மக்களை பொருளாதார மைய நீரோட்டத்தில் இணைப்பதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வலிமையான அடித்தளம் கட்டமைக்கப்படுகிறது.”
திவாஹர்
