ஐஎன்எஸ் சில்காவில் இவ்வாண்டின் முதலாவது தொகுப்பு கடற்படை அக்னி வீரர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு.

ஐஎன்எஸ் சில்காவில் இவ்வாண்டின் முதலாவது தொகுப்பில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் அக்னி வீரர்கள் பயிற்சி முடித்தவர்களின் அணிவகுப்பு 2026 ஜூன் 12 அன்று நடைபெறவுள்ளது. இந்திய கடற்படை, இந்திய கடலோரக் காவல் படை ஆகியவற்றில் அக்னி வீரர்களுக்கான 16 வார வெற்றிகரமான பயிற்சியின் நிறைவை இந்த அணிவகுப்பு குறிக்கிறது.

இந்தியக் கடற்படையின் மேற்கு கமாண்டர் வைஸ் அட்மிரல், சஞ்சய் வாத்சாயன் இந்த அணிவகுப்பில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வார். அணிவகுப்பில் பங்கேற்கும் பயிற்சியாளர்களின் குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியில் பெருமையுடன் பங்கேற்பார்கள். மேலும் மூத்த அதிகாரிகளும் பிரபல விளையாட்டு வீரர்களும் பல்வேறு துறைகளின் பிரமுகர்களும் இதில் கலந்து கொள்வார்கள்.

பயிற்சியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விருதுகளையும் கேடயங்களையும் இந்நிகழ்ச்சியின் போது தலைமை விருந்தினர் வழங்குவார்.

Leave a Reply