ஐஐஎஃப்டி-ல் உலகளாவிய வணிக ஆராய்ச்சி மாநாடு 2026: மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா தொடங்கி வைத்தார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா, இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் ‘உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் வணிகத்தை நிர்வகித்தல்’ என்ற கருப்பொருள் கொண்ட உலகளாவிய வணிக ஆராய்ச்சி மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய அமைச்சர், உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் வர்த்தகம், உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர் போன்ற துறைகளில் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

இம்மாநாட்டில் சர்வதேச வர்த்தகம், வணிகப் போட்டித்தன்மை, புவிசார் அரசியல் சூழலில் பிரிக்ஸ் நாடுகளின் முக்கியப் பங்கு குறித்து கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்களுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. சர்வதேச வணிகக் கல்வி மற்றும் கொள்கை சார்ந்த ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் இந்த நிறுவனத்தின் பங்களிப்பை அமைச்சர் பாராட்டினார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கான விருதுகளுடன் நாளை (ஜூன் 5, 2026) நிறைவடைகிறது

Leave a Reply