உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் வேளாண் துறையில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், இன்று தனது இல்லத்தில் ஒரு முக்கிய ஆய்வுக் கூட்டத்தைக் கூட்டினார். தற்போதைய உலகளாவிய நிலையற்ற தன்மைக்கு மத்தியில் இந்திய வேளாண் துறை மற்றும் அதன் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதும், வரவிருக்கும் காரிஃப் பருவத்திற்கான மூலோபாயத் தயார்நிலையை உறுதி செய்வதும் இக்கூட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

கூட்டத்தின் போது, ​​மத்திய வேளாண் அமைச்சர், நெருக்கடியான காலங்களில் வேளாண் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கூட்டத்தின் முக்கிய அம்சங்களும் முடிவுகளும்:

உர விநியோகம் மற்றும் விவசாயி அடையாளம்:

மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங், உரங்களின் சமமான மற்றும் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். விநியோக முறையை வெளிப்படையானதாக மாற்றுவதற்காக, ‘விவசாயி அடையாள அட்டைகள்’ வழங்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர்களுடன் விரைவில் ஒரு கூட்டத்தை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply